Home One Line P2 புதிய மேம்படுத்தப்பட்ட ஆக்சியா ரக வாகனம் 5,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது!

புதிய மேம்படுத்தப்பட்ட ஆக்சியா ரக வாகனம் 5,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது!

791
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2019-ஆம் ஆண்டுக்கான பெரோடுவா ஆக்சியா காரை கடந்த வெள்ளிக்கிழமை பெரொடுவா அறிமுகப்படுத்தியது. கடந்த ஆகஸ்ட் 22 முதல், 5,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளதாக அதன் தலைவர், தலைமை நிருவாக அதிகாரி டத்தோ சைனால் அபிடின் அகமட் வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேம்படுத்தப்பட்ட ஏபிரிவு ஹேட்ச்பேக்கை பெரோடூவா தலைவர் டான்ஸ்ரீ அஸ்மத் கமாலுடின் வெள்ளிக்கிழமை  அறிமுகப்படுத்தினார்.

2019-ஆம் ஆண்டுக்கான பெரோடுவா ஆக்சியா ஆறு வகைகளாக வெளியிடப்படுகின்றன. 

#TamilSchoolmychoice

, ஜி, ஜிஎக்ஸ்ட்ரா, எஸ்இ, ஏவி மற்றும் ஓர் அற்புதமான புதிய மாதிரியும் வெளியிடப்பட்டுள்ளது. தீபகற்ப மலேசியாவிற்கான காப்பீட்டுக்கு முன்பான விலையாக 24,090 ரிங்கிட்டிலிருந்து  43,190 ரிங்கிட் வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.