Home One Line P1 கிறிஸ்துவ கல்லறையை சேதப்படுத்தி, பொருட்களை களவாடிச் சென்றவர்களை காவல் துறை தேடுகிறது!

கிறிஸ்துவ கல்லறையை சேதப்படுத்தி, பொருட்களை களவாடிச் சென்றவர்களை காவல் துறை தேடுகிறது!

786
0
SHARE
Ad

மிரி: ரியாமில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சேதத்தை ஏற்படுத்திய நபர்களை காவல் துரையினர் தேடி வருவதாக மிரி காவால் துறை தெரிவித்துள்ளது.

மிரி மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏ.சி.பி லிம் மெங் சீ கூறுகையில், 26 வயதான ஒருவர் தனது தாத்தாவின் கல்லறை மற்றும் பிற கல்லறைகள் சேதமடைந்துள்ளதைக் கண்டதும் காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்த பின்னர் இந்த சம்பவம் உணரப்பட்டதாக தெரிவித்தார்.

புகார்தாரர் நேற்று காலை 9.30 மணியளவில் கல்லறைக்குச் சென்றுள்ளார். அவரது தாத்தாவின் கல்லறை அகற்றப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்,” என்று அவர் இன்று திங்கட்கிழமை மிரியில் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மிரியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பணிபுரியும் புகார்தாரர், அவரது தாத்தாவுக்குச் சொந்தமான பொருட்கள் அக்கல்லறையிலிருந்து காணாமல் போனதைக் குறிப்பிட்டுள்ளார். தாம் கடந்த வாரம் கல்லறைக்கு கடைசியாக வருகை தந்ததாக அவர் கூறினார்.

இந்த வழக்கு, தண்டனைச் சட்டதம் 297-வது பிரிவின் கீழ் விசாரணையில் உள்ளது.