கோலாலம்பூர்: சர்சைக்குரிய மலேசிய தொழிலதிபர் ஜோ லோவுக்கு முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்குடன் நேரடி அணுகல் இருந்ததாக இன்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
1எம்டிபியின் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரி டத்தோ ஷாஹ்ரோல் அஸ்ரால் இப்ராகிம் ஹால்மி, கூறுகையில், அவர் திரெங்கானு முதலீட்டு ஆணையத்தில் (டிஐஏ) பணிபுரிந்த போது, ஜோ லோ எப்படி பல சந்தர்ப்பங்களில் நேரடியாக நஜிப்பை தொடர்பு கொண்டாரென்பதைக் கவனித்ததாகக் கூறினார்.
“அவருக்கு நஜிப்புக்கு நேரடி அணுகல் இருப்பதை என்னால் காண முடிந்தது. எடுத்துக்காட்டாக, டிஐஏ இயக்குநர்கள் குழு கூட்டங்களின் போது, அவர் நேரடியாக நஜீப்பைத் தொடர்புகொண்டு தனது கருத்துக்களையும் வழிகாட்டுதலையும் கேட்டுள்ளார்.” என்று ஷாஹ்ரோல் தனது சாட்சி அறிக்கை.
2004-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2009 ஏப்ரல் வரை மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்தபோது புத்ராஜெயாவில் உள்ள ஸ்ரீ சத்ரியாவில் அவரது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் இங்குள்ள ஜாலான் லங்காக் டூதா தனியார் இல்லத்திலும் ஜோ லோவுக்கு அணுகல் இருந்ததாக அவர் கூறினார்.