Home One Line P2 6-வது முறையாக பிபாவின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வு!

6-வது முறையாக பிபாவின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வு!

798
0
SHARE
Ad

மிலன்: அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார்.

லிவர்பூல்லின் விர்ஜில் வான் டிஜ்க் (Virgil Van Dijk) மற்றும் ஐந்து முறை அந்த விருதை வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை வீழ்த்தி நேற்று திங்களன்று ஆறாவது முறையாக சாதனை படைத்து இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை அவர் வென்றார்.

கடந்த சீசனில் பார்சிலோனாவுடன் ஸ்பானிஷ் லா லிகா பட்டத்தையும், ஐரோப்பிய தங்க காலணியையும் வென்ற மெஸ்ஸி, 58 ஆட்டங்களில் 54 கோல்களை அடித்துள்ளார். கடைசியாக மெஸ்ஸி 2015-இல் இந்த விருதை வென்றுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டோவும் ஆறு முறை இந்த விருதினைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.