Home உலகம் லியோனல் மெசி : காற்பந்து விளையாட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடக்கினார்

லியோனல் மெசி : காற்பந்து விளையாட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடக்கினார்

865
0
SHARE
Ad

பாரிஸ் : உலகின் முதல்நிலை காற்பந்து ஆட்டக்காரர்களில் ஒருவரான லியோனல் மெசி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 10) முதல் தனது காற்பந்து விளையாட்டுப் பயணத்தில் அடுத்த கட்ட புதிய பயணத்தைத் தொடங்க பாரிஸ் நகரை வந்தடைந்தார்.

தனது பதின்ம வயது முதல் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா குழுவில் இணைந்து விளையாடி வருகிறார் 34 வயதான அர்ஜெண்டினாவின் மெசி.

#TamilSchoolmychoice

உலகின் முதன் நிலை ஆட்டக்காரராக உயர்ந்த மெசி, பார்சிலோனாவின் வெற்றிக்காகவும் நூற்றுக்கணக்கான கோல்கள் அடித்தவர்.

தற்போது பார்சிலோனா தனது ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காததைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி என்றழைக்கப்படும் பாரிஸ் சேயிண்ட் ஜெர்மெயின் காற்பந்து கிளப்புக்கு விளையாடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் மெசி.

அடுத்த இரண்டு வருடங்களுக்கு பிஎஸ்ஜி குழுவுக்கு விளையாடவிருக்கும் மெசி, மேலும் ஓராண்டுக்கு தனது ஒப்பந்தத்தை நீட்டிக்கும் வாய்ப்பையும் கொண்டிருக்கிறார்.

பிரேசில் நாட்டின் மற்றொரு முன்னணி காற்பந்து விளையாட்டாளரான நெய்மார், இதே பிஎஸ்ஜி காற்பந்து கிளப்புக்காக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருவரும் இணைந்து ஐரோப்பிய காற்பந்து போட்டிகளில் பிஎஸ்ஜி குழுவுக்கு வெற்றியைத் தேடித் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு காற்பந்து இரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.