Home நாடு கொவிட் 19 : தொற்றுகள் புதிய உச்சத்தைத் தொட்டன : 21,668

கொவிட் 19 : தொற்றுகள் புதிய உச்சத்தைத் தொட்டன : 21,668

713
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று  ஆகஸ்ட் 12 வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 21,668 ஆகப் பதிவாகி இதுவரை இல்லாத புதிய எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது.

இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 1,342,215 ஆக உயர்ந்ததாக சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் தகவல் வெளியிட்டார்.

சிலாங்கூர் 6 ஆயிரத்தைக் கடந்தும், கோலாலம்பூர் 2 ஆயிரத்துக்கும் கூடுதலாகவும் தொற்றுகளைப் பதிவு செய்தன.

#TamilSchoolmychoice

இவை தவிர, ஜோகூர், சரவாக் ஆகிய மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்த வேளையில், சபா 2,052 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் என்ற நிலையில் இருந்து வருகின்றன.