புவெனஸ் ஐரிஸ்: கடந்த ஜூலை மாதம் நடந்த கோபா அமெரிக்கா தொடரில் சிலி அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜெண்டினா வென்றது.
அப்போட்டிக்குப் பிறகு மெஸ்சி கொன்மெபொல் (CONMEBOL ) எனும் தென் அமெரிக்காவை நிர்வகிக்கும் கால்பந்து நிர்வாகத்தை அதிகமாக விமர்சித்ததோடு, அதன் மீது ஊழல் குற்றச்சாட்டையும் முன் வைத்தார். இதனால், அவருக்கு மூன்று மாதங்கள் விளையாடுவதிலிருந்து தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, மெஸ்சியின் தடை காலம் நாளை சனிக்கிழமையுடன் (நவம்பர் 3) முடிவடைகிறது. அதன் பின்பு நடக்கவுள்ள நட்பு ரீதியான போட்டிகளில் மெஸ்சி விளையாடவுள்ளார்.