Home One Line P1 வேக தடுப்பு இல்லாத மிதிவண்டிகளை சாலைகளில் பயன்படுத்துவோர் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கவும்!

வேக தடுப்பு இல்லாத மிதிவண்டிகளை சாலைகளில் பயன்படுத்துவோர் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கவும்!

644
0
SHARE
Ad

திரெங்கானு: வேக தடுப்பு இல்லாத மிதிவண்டிகளை சாலைகளில் பயன்படுத்துவோர் தொடர்பாக மாநிலத்தில் உள்ள காவல் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திரெங்கானு குற்றத் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் துறைத் தலைவர் நூர் ஹாலிம் நோர்டின் கூறுகையில், இது போன்ற நடவடிக்கைகள் அம்மாநிலத்தில் இன்னும் இடம்பெறவில்லையானாலும், இளைஞர்கள் மத்தியில் இது போன்ற பிரச்சனைகளை தீவிரமாக பார்ப்பதாகக் கூறினார்.

இது போன்ற நடவடிக்கைகள் மிதிவண்டியைப் பயன்படுத்துவோருக்கு மட்டும் ஆபத்தை விளைவிக்காது, பிற சாலை பயனர்களுக்கும் ஆபத்தாக முடிகிறது” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சாலையில் இது போன்ற நடவடிக்கைகளைக் காணும் பொதுமக்கள் தங்களின் கைபேசியில் காணொளிகள் அல்லது படங்களைப் பதிவு செய்து, மேலும் நடவடிக்கைகளுக்காக அத்தகவல்களை காவல் துறையினருக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

காவல் துறையினர் இந்த நடவடிக்கையை கண்டறிந்தால், அவ்விளைஞர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். அதே நேரத்தில் அவர்களின் பெற்றோர்களும் காவல் நிலையத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.