Home One Line P1 பினாங்கு துப்பாக்கிச் சூடு: சமூக ஊடக குற்றச்சாட்டுகளில் 3 நபர்களை காவல் துறை தேடுகிறது!

பினாங்கு துப்பாக்கிச் சூடு: சமூக ஊடக குற்றச்சாட்டுகளில் 3 நபர்களை காவல் துறை தேடுகிறது!

744
0
SHARE
Ad
படம: நன்றி சினார் ஹாரியான்

கோலாலம்பூர்: அண்மையில் பினாங்கில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் வந்த கட்டுரையைத் தொடர்ந்து மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

புக்கிட் அமானின் குற்றப் புலனாய்வுத் துறையின் வழக்கு மற்றும் சட்டத் துறை தலைமை உதவி இயக்குநர் மியோர் ஃபாரிடாலாத்ராஷ் வாஹிட் கூறுகையில்,  தேசத் துரோகமாகக் கருதப்படும் பரப்பப்பட்ட அறிக்கைகள் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் தேடப்படுவதாகக் கூறினார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல ஆத்திரமூட்டும் அறிக்கைகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மூன்று சந்தேக நபர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இரண்டு பேர் கெடாவைச் சேர்ந்தவர்கள், மேலும் மற்றும் ஒருவர் பினாங்கைச் சேர்ந்தவர். நாங்கள் அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்என்று புக்கிட் அமானில் இன்று வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி சம்பவத்தில், இரண்டு வெட்டுக் கத்திகள் மற்றும் கத்தியால் காவல் துறையினரை தாக்க முயன்ற ஒருவரை காவல் துரையினர் சுட்டுக் கொன்றனர். அதற்கு முன்னதாக, அந்நபர் மேற்பார்வையாளரைக் கொன்று, மேலும் ஒரு பாதுகாப்பு காவலரையும் காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து,  நபிகள் நாயகத்தை அவமதித்ததால் அந்நபர் அவ்வாறு செயல்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அது உண்மையல்ல. அவர் மத்திய கிழக்கு நாடுகளின் காணொளிகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மனநல பிரச்சனைகள் உள்ளனஎன்று மியோர் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பாயான் லெப்பாசில் நடந்த சம்பவம் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வழக்கு என்றும், எந்தவொரு குழுவினருடனும் அல்லது தனிநபருடனும் தொடர்பு இல்லை என்றும் காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமீட் பாடோர் நேற்று புதன்கிழமை கூறியிருந்தார்.

பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பியவர்கள் இனரீதியாக தீங்கு அல்லது பதட்டங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இது ஒரு மத தகராறாக உருமாறும் என்பதால், தங்கள் சொந்த அனுமானங்களை செய்ய வேண்டாம் என்றும் ஹாமீட் மக்களுக்கு அறிவுறுத்தினார்.