சென்னை: மலேசிய சுற்றுலாவுக்கு ஊக்குவிப்பு பிரச்சாரம் நூற்றுக்கணக்கான பயண முகவர்களை ஈர்த்துள்ளதாக சென்னைக்கான மலேசிய துணைத் தூதர் சரவணன் தெரிவித்துள்ளார்.
பயண முகவர்கள், தயாரிப்பு உரிமையாளர்கள், செரி பசிபிக் தங்கும் விடுதி, மலிண்டோ ஏர் மற்றும் சரவாக் சுற்றுலா வாரியம் ஆகியோரைக் கொண்ட இருபத்தெட்டு மலேசிய சுற்றுலாத் துறை பங்கேற்பாளர்கள், இந்தியாவில், 2020-ஆம் ஆண்டுக்கான மலேசியாவுக்கு வருகை புரியும் திட்டத்தை ஆதரிக்க கைகோர்த்துள்ளனர்.
இந்த வாரம் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் விளம்பர நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும், வணிக வலையமைப்பு அமர்வுகளுக்காக 400-க்கும் மேற்பட்ட உள்ளூர் பயண முகவர்களை ஈர்த்துள்ளதாக மலேசிய சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
தனி பயணிகள், வணிக பார்வையாளர்கள், குடும்ப சுற்றுலா பயணிகள் மற்றும் தேனிலவு பயணிகள் ஆகியோரை அணுகுவதன் மூலம், சுற்றுலா வருகையை கணிசமாக அதிகரிக்க முடியும் என்று நம்புவதாக அது தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் வரை இந்தியாவில் இருந்து 354,486 சுற்றுலாப் பயணிகள் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளனர். சிங்கப்பூர், இந்தோனிசியா, சீனா, தாய்லாந்து மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தில் மலேசியா இடம்பெற்றுள்ளது.