Home One Line P1 தொழில்நுட்ப மாற்றங்கள் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகின்றன!

தொழில்நுட்ப மாற்றங்கள் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகின்றன!

664
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்கள், இளைஞர்களுக்கு நாட்டிற்குள் மட்டுமல்லாமல் உலகளவில் பெரிய வெற்றிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளாகக் கருதப்பட வேண்டும்.

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோவிந்த் சிங் டியோ கூறுகையில், மின்னியல் சகாப்தம், தகவல் தொடர்புத் துறையில் மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கை முறையை மாற்றக்கூடிய பொருளாதாரத்திலும் அதிக வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறினார்.

நம் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் அனைத்து இளைஞர்களும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடனும், எல்லையற்ற மின்னியல் உலகத்துடனும், நம் நாடு இந்த பிராந்தியத்தில் ஒரு பொருளாதார முன்னுதாரணமாவதற்கு வல்லது.”என்று அவர் கூறினார்.