Home One Line P2 இம்ரான் கான் பயணம் செய்த விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு – மீண்டும் நியூயார்க் திரும்பியது

இம்ரான் கான் பயணம் செய்த விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு – மீண்டும் நியூயார்க் திரும்பியது

757
0
SHARE
Ad

நியூயார்க்: இங்கு நடைபெற்று வரும் ஐநா பொதுப் பேரவையில் கலந்து கொண்டு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானுக்குத் திரும்பும் வழியில் அவர் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் நியூயார்க் நகருக்கே திரும்ப நேர்ந்தது.

இம்ரான் கான் பயணம் செய்த விமானம் சவுதி அரேபிய இளவரசரின் சொந்த விமானமாகும். அமெரிக்கா வருவதற்கு முன்னர் சவுதி அரேபியாவுக்கு வருகை தந்த இம்ரான் கான் அங்கிருந்து அமெரிக்கா செல்ல சவுதி இளவரசரின் தனி விமானத்தைப் பயன்படுத்தினார்.

அமெரிக்கா வருகை மற்றும் ஐநா உரை போன்ற நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நியூயார்க் கென்னடி விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானம் உடனடியாக மீண்டும் நியூயார்க் விமான நிலையத்திற்கே திரும்ப நேர்ந்தது.

#TamilSchoolmychoice

மீண்டும் நியூயார்க்கில் தங்கும் விடுதிக்குத் திரும்பிய இம்ரான் கான் விமானத்தின் தொழில் நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டவுடன் மீண்டும் பாகிஸ்தானுக்குப் புறப்பட்டு, இஸ்லாமாபாத் வந்தடைந்தார்.

பாகிஸ்தான் திரும்பிய இம்ரான் கான் காஷ்மீர மக்களுக்கான ஜிஹாத் போராட்டம் தொடரும் என்றும் எப்போதும் பாகிஸ்தான் காஷ்மீர் மக்களுக்குத் துணை நிற்கும் என்றும் கூறியிருக்கிறார்.