Home One Line P2 பிக்பாஸ் 3 : சாண்டி காப்பாற்றப்பட்டார்

பிக்பாஸ் 3 : சாண்டி காப்பாற்றப்பட்டார்

845
0
SHARE
Ad

சென்னை – 100 நாட்களை நிறைவு செய்யப் போகும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக்பாஸ் 3’ தொடரில், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சாண்டி காப்பாற்றப்படுவதாக நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் அறிவித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களில் முகேன் ராவ் மட்டும் நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருக்கிறார் என பிக் பாஸ் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து எஞ்சிய பங்கேற்பாளர்கள் அனைவருமே பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டவர்களாக மாறியிருக்கின்றனர்.

இவர்களில் பிக்பாஸ் வழங்கிய 5 இலட்சம் ரூபாயை ஏற்றுக் கொண்டு பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறுவதாக கவின் அறிவித்து அதன்படியே வெளியேறினார். அவரை அழைத்து நேற்று சனிக்கிழமை நிகழ்ச்சியில் கமல்ஹாசன் உரையாடினார். பின்னர் கவினை எஞ்சியுள்ள பங்கேற்பாளர்களுடனும் அகம் தொலைக்காட்சி வழியே நேரடியாகக் கலந்துரையாட வைத்தார்.

#TamilSchoolmychoice

இதன் காரணமாகத் தற்போது பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நால்வர் தர்ஷன், சாண்டி, ஷெரின், லோஸ்லியா ஆகியோராவர்.

இவர்களில் சாண்டி காப்பாற்றப்பட்டிருப்பதாக அறிவித்த கமல், எஞ்சிய மூவரில் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்படுபவரை (இன்றைய) ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் தெரிவிப்பதாக கூறி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.