Home One Line P2 பிக்பாஸ் 3 : 5 இலட்சம் போதும் என்று வெளியேறிய கவின்!

பிக்பாஸ் 3 : 5 இலட்சம் போதும் என்று வெளியேறிய கவின்!

1152
0
SHARE
Ad

சென்னை – நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 26) ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராத திருப்பமாக கவின் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறினார்.

பரிசுத் தொகையில் 5 இலட்சம் ரூபாய் இப்போது வழங்கப்படுகிறது – போட்டியிலிருந்து விலகிக் கொள்ள விரும்புபவர்கள் – இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு பிக்பாஸ் இல்லத்திலிருந்து இன்றே வெளியேறலாம் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

உடனடியாக பிக் பாசின் இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு வெளியேற கவின் தயாரானார். ஆனால் மற்றவர்கள் அவரைத் தடுத்தனர். “இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஏன் இப்படிச் செய்கிறாய், வார இறுதிவரை இரு” என மற்ற பங்கேற்பாளர்கள் வற்புறுத்திய போதிலும் கவின் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

#TamilSchoolmychoice

குறிப்பாக லோஸ்லியா அழுது கலங்கியபடி கவினை தொடர்ந்து இருக்குமாறு எவ்வளவோ வற்புறுத்தினார். சாண்டியும் கவினை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

எனினும், யாருடைய பேச்சையும் கேட்காமல், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து கவின் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

கடந்த வாரம் இயக்குநர் சேரன் இரசிகர்களால் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இறுதிச் சுற்றில் முதல் பங்கேற்பாளராகத் தேர்வு பெற்ற முகேன்

இதற்கிடையில், கடந்த வாரம் முழுவதும் நடத்தப்பட்ட கஷ்டமான பணிகளை பங்கேற்பாளர்கள் மேற்கொள்ளும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதல் நிலையில் வெற்றி பெற்ற மலேசியரான முகேன் நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என பிக்பாஸ் அறிவித்தார்.

மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக மலேசியர் ஒருவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் முகேன் கடுமையான போட்டிகளுக்கிடையில், உலகம் எங்கும் உள்ள இரசிகர்களாலும், தமிழக இரசிகர்களாலும் இதுவரையில் வெளியேற்றப்படாமல் ஆதரவு பெற்றிருப்பதோடு, தற்போது இறுதிச் சுற்றுக்கும் தேர்வு பெற்று சாதனை புரிந்துள்ளார்.