அதைத் தொடர்ந்து அவருக்குப் பல பட வாய்ப்புகள் வந்தாலும் முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 28) அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படம் “வெற்றி” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று சமூக ஊடகங்களில் அந்தப் படத்தின் முதல் தோற்றக் காட்சியோடு வெளியிடப்பட்டிருக்கிறது.
கதாநாயகனாக முகேன் ராவ் அறிமுகமாக அவருடன் கதாநாயகியாக அனுகிரீத்தி வாஸ் நடிக்கிறார்.
மலேசியாவிலிருந்து நடிப்புத் துறையில் தமிழகத் திரையுலகில் பிரகாசித்தவர்களில் எப்போதுமே முன்னணி வகிப்பவர் மறைந்த நடிகர் ரவிச்சந்திரன். அதைத் தொடர்ந்து “தேவைகள்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார் மலேசியக் கலைஞர் மனு இராமலிங்கம்.
அதன்பின்னர் கதாநாயகன் என்ற அளவில் இதுவரையில் யாரும் மலேசியாவிலிருந்து தமிழ்த் திரையுலகில் பிரகாசிக்கவில்லை.
அந்த சாதனையை முதன் முறையாக முகேன் ராவ் நிகழ்த்தியிருக்கிறார்.