Home One Line P1 ஜனவரி தொடங்கி உணவு வளாகத்தில் புகைப்பிடித்தால் தனிநபர், கடை உரிமையாளருக்கு அபராதம்!

ஜனவரி தொடங்கி உணவு வளாகத்தில் புகைப்பிடித்தால் தனிநபர், கடை உரிமையாளருக்கு அபராதம்!

894
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இவ்வாண்டு ஜனவரி தொடக்கத்தில் இருந்து உணவு வளாகங்களில் புகைபிடிக்கும் தடையை அமல்படுத்திய காலத்தில் மொத்தம் 4,332 எச்சரிக்கை கடிதங்கள் உணவுக் கடை உரிமையாளர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிலாங்கூர் சுகாதாரத் துறை இயக்குனர் டத்துக் டாக்டர் காலித் இப்ராஹிம், உணவு வளாகத்தில் புகைபிடிப்பதற்காக 232 எச்சரிக்கைக் கடிதங்களும், மேலும் 4,100 உணவு வளாக உரிமையாளர்களுக்கு, சிகரெட் துண்டுகள் அவர்களது உணவு வளாகத்தில் இருந்ததால் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இவை அனைத்தும் இன்னும் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை. மேலும் 2020-ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி மட்டுமே நாங்கள்  தனிநபருக்கும் வளாகத்தின் உரிமையாளருக்கும் அபராதத்தினை பயன்படுத்துவோம்.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஜனவரி 1 முதல், புகைபிடிப்பவர்கள் தடுத்து வைக்கப்பட்டால் அவர்களுக்கு 10,000 ரிங்கிட் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதே நேரத்தில் அறிவிப்பு இல்லாத உணவு வளாகங்களுக்கு 3,000 ரிங்கிட் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்என்று செய்தியாளர்களிடம் கூறினார்.