Home One Line P2 “தமிழ் பழமையானது என நான் பேசினேன், அதனை அமெரிக்க ஊடகங்கள் அதிகமாக பகிர்கின்றன”- மோடி

“தமிழ் பழமையானது என நான் பேசினேன், அதனை அமெரிக்க ஊடகங்கள் அதிகமாக பகிர்கின்றன”- மோடி

1165
0
SHARE
Ad

சென்னை: அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மொழியில் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற வாசகத்தை குறிப்பிட்டுப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் பகிரப்பட்டு வந்த போதும், ஒரு சில குழுவினரின் மாற்று கருத்துகளும் பதிவிடப்பட்டு வருகின்றன.

தமிழ்மொழியின் தொன்மை குறித்து தாம் அமெரிக்காவில் பேசியதை தொடர்ந்து, அந்நாட்டு ஊடகங்களில் தமிழ் குறித்து அதிகமான செய்திகள் வருவதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

இன்று திங்கட்கிழமை சென்னையில் நடைபெற  உள்ள ஐஐடியின் 56-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்ள வந்த போது, மோடி இவ்வாறு கூறியுள்ளார். 

#TamilSchoolmychoice

“தமிழ் மொழி குறித்து தான் தற்போது அமெரிக்க ஊடகங்கள் அதிக அளவில் செய்தி வெளியிட்டு வருகின்றனஅமெரிக்காவில் வசித்து வரும் தமிழர்கள் நலமுடன் உள்ளனர்இந்தியாவை பற்றிய பெரும் எதிர்பார்ப்பு அமெரிக்க மக்களுக்கு உள்ளது.” என்று அவர் கூறினார்.