Home One Line P1 முஸ்லீம் மாணவர்கள் இஸ்லாத்தில் பிரார்த்தனை செய்வதைத் தடை செய்ததாக காவல் துறையில் 10 புகார்கள்!

முஸ்லீம் மாணவர்கள் இஸ்லாத்தில் பிரார்த்தனை செய்வதைத் தடை செய்ததாக காவல் துறையில் 10 புகார்கள்!

803
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: ஒரு பள்ளி நிகழ்வில் இஸ்லாமிய பிரார்த்தனை வாசிப்பை அனுமதிக்காத பினாங்கிலுள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டுமென்று கூறி நாடு முழுவதும் பத்து காவல் துறை புகார்கள் பெறப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு இயக்குனர் மியோர் பார்டாலாத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.

இது வரையிலும் ஐந்து நபர்கள் இது குறித்த விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மூன்று மாநிலங்களில், அதாவது பினாங்கில் எட்டு, சிலாங்கூர் மற்றும் கெடாவில் தலா ஒரு புகார் அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முன்னதாக இன்று திங்கட்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய மியோர், தண்டனைச் சட்டம் பிரிவு 505-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த வெள்ளிக்கிழமை, பள்ளியில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் பல நபர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்பட்டதுடன், முஸ்லீம் மாணவர்கள் இஸ்லாத்தில் பிரார்த்தனை செய்வதைத் தடை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.