லாஸ் ஏஞ்சல்ஸ்: பிளே ஸ்டோரிலிருந்து 29 தீங்கிழைக்கும் பயன்பாடுகளை கூகுள் நீக்கியுள்ளது. இது குறித்த அறிக்கையை குவிக் ஹில் செகியூரிட்டி லேப்ஸ் (Quick Heal Security Labs) கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது.
“பல முறை, இந்த விளம்பரப்படுத்தப்பட்ட கைபேசி செயலிகள் எக்ஸ்–ரே ஸ்கேனிங் போன்ற நம்ப முடியாத பல செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. எக்ஸ்–ரே ஸ்கேனிங்கின் செயல்பாட்டை வழங்குவதாகக் கூறும் சுவாரஸ்யமான ஆண்ட்ராய்டு செயலிகளின் சில விளம்பரங்களை நாங்கள் கண்டோம். பயன்பாட்டை மேலும் ஆராய்ந்த போது, இது போன்ற இரண்டு செயலிகள் ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் மேலான பதிவிறக்கங்களைக் கடந்து விட்டன” என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
ஹேட்வேர் (Adware) செயலியில் பார்வையை பெரிதாக்கும் செயல்பாட்டை வழங்குவதாக விளம்பர செய்து வருகிறது. ஆனால் உண்மையில் இவை பயனாளர்களின் கைபேசிகளில் அதிக விளம்பரங்களைக் காட்டுகின்றன. இறுதியில், கைபேசியின் மின்கலனை குறைத்து விடுகிறது என்று அது தெரிவித்துள்ளது.