Home One Line P1 அடிப்: சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதும் வழக்குத் தொடுக்கப்படும்!- டோமி தோமஸ்

அடிப்: சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதும் வழக்குத் தொடுக்கப்படும்!- டோமி தோமஸ்

831
0
SHARE
Ad

கோலாலம்பூர்: விசாரணை ஆவணங்கள் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரணம் தொடர்பான சட்ட நடைமுறைகளை விசாரிக்கவும் தொடரவும் அனைத்து முயற்சிகளையும் அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம் மேற்கொள்ளும் என்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தெரிவித்துள்ளார்.

இது இத்துறையின் வாக்குறுதிஎன்று அவர் கூறினார்.

முகம்ட அடிப்பின் துயர மரணம் தொடர்பான விசாரணையின் முடிவில், கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதியின் முடிவைத் தொடர்ந்து பல்வேறு அரசு நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஏராளமான ஊகங்கள் மற்றும் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என்றும் தோமஸ் எடுத்துரைத்தார்.

#TamilSchoolmychoice

விசாரணை முடிந்ததும், சந்தேக நபரை காவல் துறையினர் அடையாளம் கண்டதும், காவல் துறையின் பரிந்துரையுடன் விசாரணை அறிக்கை துணை அரசு வழக்கறிஞரிடம் வழங்கப்படும்.

அந்த கட்டத்தில் இந்த துறையின் பணிகள் தொடங்கும். நீதித்துறை விசாரணை ஆவணங்களை ஆராய்ந்து, காவல் துறையின் பரிந்துரைகளை பரிசீலிக்க வேண்டும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும்.” என்று அவர் கூறினார்.

காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் காவல் துறையினர் விசாரிப்பர் என்று பொது மக்களிடம் தெரிவித்ததாகவும் தோமஸ் கூறினார். எனவே, காவல் துறையினர் தங்கள் விசாரணையை நடத்த நேரத்தை பொது மக்கள் வழங்க வேண்டும் என்றார்.

சட்டத்தின் கீழ் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்கான ஆதாரங்களும் நிபுணத்துவமும் காவல்துறைக்கு உள்ளது.” என்று அவர் கூறினார்.