
கோலாலம்பூர்: ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான கைரி ஜமாலுடின் ஓர் உள்ளூர் பத்திரிகைக்கு விளம்பர அழகனாகத் தோன்றிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டதும் அவை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
செப்டம்பர் மாத அன்ரிசேர்வ்ட் மீடியா (Unreserved Media ) இதழுக்கான முகப்பு அட்டையில் கைரியின் அப்புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.

43 வயதான அரசியல்வாதி ஆண்மை பொருந்திய கட்டழகுடன், அனைத்துலக ஆணழகன்களைப் போன்று காட்சியளிக்கிறார். அவ்விதழின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்படம் பகிரப்பட்டிருந்தது.
அழகான தோற்றத்துடன் மட்டுமல்லாமல், கைரியின் சமீபத்திய சிகை அலங்காரங்களும் அவரது வித்தியாசமான ஆளுமை மற்றும் பக்கங்களைக் காட்டுவதாக அமைந்துள்ளது. பிரபல தமிழ் திரைப்பட சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் என்ற பெயரில் கைரியின் தோற்றத்தை பொது மக்கள் சமூகப் பக்கங்களில் பாராட்டி கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.