Home One Line P2 விஜய்யின் தளபதி 64 பூசையுடன் தொடங்கியது!

விஜய்யின் தளபதி 64 பூசையுடன் தொடங்கியது!

826
0
SHARE
Ad

சென்னை: நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவர இருக்கும் பிகில் படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கையில், விஜய்யின் 64-வது படம் குறித்து புதிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணமாக இருந்தன.

இதனிடையே, இப்படம் பூசையுடன் இன்று வியாழக்கிழமை தொடங்கியது.

விஜய் 64 படத்தை மாநகரம் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்

#TamilSchoolmychoice

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கும் வேளையில், மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ், சாந்தனு மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோரும் ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார்.

இப்படம் அடுத்த ஆண்டும் மே மாதத்தில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.