கோலாலம்பூர்: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் வருகிற ஞாயிற்றுக்கிழமை மலாய் தன்மான காங்கிரசில் (கேஎம்எம்) கலந்து கொள்ள இருப்பதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்தார்.
தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறை அமைச்சருமான அவர் கூறுகையில், டாக்டர் மகாதீர் மலாய் சமூகத்துடன் பேச விரும்புகிறார், அது ஒரு பிரச்சனை அல்ல என்று கூறினார்.
முன்னதாக, மலேசியர்கள் அனைவருக்கும் பிரதமராக இருக்கும் டாக்டர் மகாதீர் காங்கிரசில் பங்கேற்பது பொருத்தமற்றது என்று நம்பிக்கைக் கூட்டணியின் சில கட்சித் தலைவர்கள் விவரித்துள்ளனர்.
இதற்கிடையில், அண்மையில் தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் இறந்ததைத் தொடர்ந்து அவரை அமைச்சரவையில் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்தமைக்காக வேதமூர்த்தி பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
பணிநீக்கம் செய்ய அழுத்தம் இருந்தபோதிலும், டாக்டர் மகாதீர், வேதமூர்த்தி பிரதமர் துறையில் அமைச்சராக இருப்பார் என்று இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
வேதமூர்த்தியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து முகமட் அடிப் மரண விசாரணை குறித்து முழு அறிக்கையைப் பெற்ற பின்னர் இது குறித்து ஆராயப்படும் என்று டாக்டர் மகாதீர் ஜனவரி மாதம் கூறியதாகக் கூறப்படுகிறது.