Home One Line P2 தீபாவளிக்கு டில்லி மற்றும் பிற நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமா? உளவுத் துறை எச்சரிக்கை!

தீபாவளிக்கு டில்லி மற்றும் பிற நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமா? உளவுத் துறை எச்சரிக்கை!

990
0
SHARE
Ad

புது டில்லி: இந்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ததன் தொடர்பில் இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து வருவது கண்கூடு. அண்மையில், ஐநா சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுடனான அணு ஆயுத போருக்குத் தயாராக இருப்பதாக எச்சரித்திருந்தார்.

இதனிடையே, ஜம்முகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவை இரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடைபெறலாம் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜய்ஷ்முகமட் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் தலைநகர் டில்லியில் ஊடுருவியுள்ளதாகவும், இவர்கள் தீபாவளி பண்டிகையன்று முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தலாம் என்றும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

#TamilSchoolmychoice

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரை குறி வைத்தும் பயங்கரவாத திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சிறப்புப் படை காவல் துறையினர் இன்று வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான விமான நிலையம்  மற்றும் இரயில் நிலையங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.