Home One Line P1 “சர்வாதிகார அரசியல்வாதியிடம் சிக்கிக் கொண்ட மலேசியா!”- சைட் ஹுசேன்

“சர்வாதிகார அரசியல்வாதியிடம் சிக்கிக் கொண்ட மலேசியா!”- சைட் ஹுசேன்

766
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆரின் இணை நிறுவனர் சைட் ஹுசேன் அலி, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சர்வாதிகாரத்திற்கு திரும்புவதை சுட்டிக் காட்டி, நாட்டின் எதிர்காலம் குறித்த தமது கவலையை தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் மலேசியர்களை முறையற்ற அரசாங்கத்திடமிருந்து மீட்டதாக நம்பிக்கைக் கூட்டணி கூறிய பின்னர், தற்போது முறையற்ற குடும்ப அரசியலில் சிக்கும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளார்.

மகாதீர் தாம் முன் இருந்தது போல, சர்வதிகாரியாக மாறி விட்டார். குறிப்பாக சமீபத்திய மாதங்களில்.” என்று மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பெர்சாத்து கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரது குடும்பங்கள் மற்றும் கூட்டாளிகளிடையே நாட்டின் பெரும் தொகை சேர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அவர் கூறினார்.

அவரது கூட்டாளிகளுக்கு, குறிப்பாக (தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவர்) டாயிம் சைனுடின், (தொழிலதிபர்) சைட் மொக்தார் அல்புகாரி மற்றும் அவரது பிள்ளைகளுக்கு பல நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

அந்நேர்காணலின் போது, ​​சைட் ஹுசேன் மீண்டும் மகாதீரை பதவி விலகுமாறு வலியுறுத்தினார்.

வருகிற நவம்பர் 16-ஆம் தேதி ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நடைபெறவிருக்கும் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் அவரது தலைமை குறித்த வாக்கெடுப்பாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

மகாதீர் மே 2021-ஆம் ஆண்டு வரை அல்லது ஒரு முழு பதவிக்காலம் வரை இந்த பதவியை வகிக்க விரும்பம் கொண்டிருக்கலாம் என்று அவர் கூறினார்.