Home One Line P1 “எஸ்எஸ்டி வரியே தொடரப்பட வேண்டும்!”- அன்வார் இப்ராகிம்

“எஸ்எஸ்டி வரியே தொடரப்பட வேண்டும்!”- அன்வார் இப்ராகிம்

773
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொருள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) நம்பிக்கைக் கூட்டணி திரும்ப அமல்படுத்த இருப்பது குறித்த ஆலோசனையை, முன்னாள் நிதியமைச்சராக அன்வார் இப்ராகிம், தற்போதைய பொருளாதார நிலைமைக்கு அது சாதகமாக இருக்காது என்று கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி சிறப்பான வரி அமைப்பு என்றாலும் இந்த வரி அமைப்பு ஏழைகளுக்கு சுமையாக இருக்கும் என்று அன்வார் கூறினார்.

ஆனால் நாடு அதற்காக தயாராக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். குறைந்த வருமானம் பெறும் மக்கள் அதிகமாக இருப்பதால், அவர்கள் இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்வார்களா என்பது ஒரு கேள்வி,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

எனவே, எஸ்எஸ்டி தொடரப்பட வேண்டும் என்று தாம் நம்புவதாகவும், ஆனால் காலப்போக்கில் இச்சேவை வரி மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.

மக்களின் விருப்பம் இருந்தால் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் மறு ஆய்வு செய்யும் என்று நேற்று வெள்ளிக்கிழமை டாக்டர் மகாதீர் கூறியிருந்தார்.