Home One Line P2 தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்!

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்!

1170
0
SHARE
Ad

சென்னை: தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலான நகைச்சுவை மற்றும் குணச்சித்திரப்பாத்திரங்களில் நடித்து வந்த பிரபல நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்காக 1983-ஆம் ஆண்டுகளில் சென்னை வந்த கிருஷ்ணமூர்த்தி நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை குழுவில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அவரின் நடிப்பில் வெளியான அத்தனை நகைச்சுவை காட்சிகளும் சிறப்பானவையாகப் போற்றப்படுகிறது. பெரும்பாலும், நடிகர் வடிவேலுவோடு நடித்த அவரின் நகைச்சுவைக் காட்சிகள் இன்னமும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.