Home One Line P2 சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்திய வாடிக்கையாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன!

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்திய வாடிக்கையாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன!

1142
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளுக்கிடையில் புதிய தானியங்கி தகவல் பரிமாற்றத்தின் கீழ் சுவிஸ் வங்கிகளில் கணக்குகள் வைத்திருக்கும் இந்திய வாடிக்கையாளர்களின் நிதிக் கணக்குகள் குறித்த விவரங்களை சுவிஸ் அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை முதன் முறையாக பகிர்ந்து கொண்டுள்ளனர் என்று ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து தானியங்கி தகவல் பரிமாற்றத்தின் உலகளாவிய தரங்களுக்குள் நிதிக் கணக்குகள் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொண்ட 75 நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்று பெயர் குறிப்பிடாத கூட்டரசு வரி நிருவாகத்தின் (எப்டிஏ) அதிகாரி கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த பரிமாற்றம் 2020-இல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“அனைத்துலக ஒப்பந்தத்தின்படி, அந்தந்த ஆண்டு முடிவடைந்த ஒன்பது மாதங்களுக்குள் பரிமாற்றங்கள் நடைபெற வேண்டும்” என்று செய்தித் தொடர்பாளர் இந்தியாவுடன் அடுத்த தகவல் பரிமாற்றம் குறித்து கூறினார்.

2018-ஆம் ஆண்டு மற்றும் அதற்கு அடுத்த ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தில் இந்திய வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் கணக்குகளின் நிதி தகவல்களை இந்தியா பெறுவது இதுவே முதல் முறை. இருப்பினும், 2018-க்கு முன்னர் வைத்திருந்த சுவிஸ் வங்கிக் கணக்குகளின் விவரங்கள் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை. மேலும் கொடுக்கப்பட்ட மற்ற தகவல்கள் கடுமையான இரகசியத்தன்மை விதிகளால் நிருவகிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சுவிஸ் வங்கிகளின் இந்திய வாடிக்கையாளர்களுடன் தொடர்புடைய கணக்குகளின் எண்ணிக்கை அல்லது நிதி சொத்துக்களின் அளவு குறித்த குறிப்பிட்ட விவரங்களை வெளியிட எப்டிஏ அதிகாரி மறுத்துவிட்டார்.