Home One Line P2 அக்டோபர் 11-12 தேதிகளில் சீன அதிபர், மோடியை சென்னையில் சந்திக்கிறார்!

அக்டோபர் 11-12 தேதிகளில் சீன அதிபர், மோடியை சென்னையில் சந்திக்கிறார்!

930
0
SHARE
Ad

சென்னை: சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருகிற அக்டோபர் 11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் முறைசாரா உச்சமாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகைப் புரிய உள்ளார்.

இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில், சீன அதிபர் இரண்டாவது முறைசாரா உச்சமாநாட்டிற்காக, அக்டோபர் 11 மற்றும் 12-இல் சென்னைக்கு வருவார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்த விவாதங்களைத் தொடர இரு தலைவர்களுக்கும் இந்த உச்சமாநாடு வாய்ப்பளிக்கும் என்று நம்பபடுகிறது.

#TamilSchoolmychoice

இந்த உச்சமாநாடு தமிழ்நாட்டின் கடலோர கோயில் நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. பல பிரச்சனைகளில் வேறுபாடுகள் இருந்தாலும் இருதரப்பு உறவுகளை முன்னெடுப்பதில், இந்த முறைசாரா உச்சிமாநாடு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு தலைவர்களும் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 27 மற்றும் 28-இல் சீனாவின் வுஹானில் தொடக்க முறைசாரா உச்சமாநாட்டை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.