Home GE-13 இந்தியர்கள் மீது மட்டுமே ஹிண்ட்ராப் கவனம் செலுத்துகிறது – பிகேஆர் முத்தையா கருத்து!

இந்தியர்கள் மீது மட்டுமே ஹிண்ட்ராப் கவனம் செலுத்துகிறது – பிகேஆர் முத்தையா கருத்து!

512
0
SHARE
Ad

Muthiah-Bk-Melawati-Sliderகிள்ளான், ஏப்.6- ஹிண்ட்ராஃப் வேட்பாளர்கள் புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்டாலும் மக்கள் கூட்டணி அத்தொகுதியை மீண்டும் தக்க வைத்து கொள்ளும் என அந்த தொகுதியின நடப்பு சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினியர் முத்தையா (படம்) கருத்துரைத்துள்ளார்.

காரணம், ஹிண்ட்ராப் இந்தியர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் மக்கள் கூட்டணி அனைத்து இனத்தவர் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு வருவதால் நிச்சயம் புக்கிட் மெலாவத்தி தொகுதியை மீண்டும் மக்கள் கூட்டணி வசம் திரும்பும் என்று அவர் தெரிவித்தார்.

உதயகுமார் தலைமையிலான ஹிண்ட்ராப் இயக்கம் கோத்தா ராஜா, கோலசிலாங்கூர், கிளானா ஜெயா ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளிலும், ஈஜோக், ஶ்ரீ அண்டாலாஸ், ஶ்ரீ மூடா, புக்கிட் மெலாவத்தி, ஶ்ரீ செத்தியா ஆகிய ஐந்து சட்டமன்றத்திலும் போட்டியிடவுள்ளதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.