Home 13வது பொதுத் தேர்தல் கேலாங் பாத்தாவில் போட்டியிடவில்லை – அப்துல் கனி ஒத்மான்

கேலாங் பாத்தாவில் போட்டியிடவில்லை – அப்துல் கனி ஒத்மான்

693
0
SHARE
Ad

ghani-othman-300x202மூவார், ஏப்ரல் 6 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் ஜோகூர் மாநிலம் கேலாங் பாத்தா தொகுதியில் ஜ.செ.க மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு எதிராக, ஜோகூர் மாநில நடப்பு மந்திரி பெசாரான அப்துல் கனி ஒத்மான் களமிறங்குவார் என்று ஜோகூர் அரசியல் வட்டாரங்களில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் இன்று புக்கிட் காம்பிர் தொகுதியில் தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டிருந்த போது செய்தியாளர்களை சந்தித்த அப்துல் கனி ஒத்மான், தான் கேலாங் பாத்தா தொகுதியில் லிம் கிட் சியாங்கிற்கு எதிராக போட்டியிடப்போவதாக எழுந்த கருத்துக்களை மறுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, “ இல்லை …இல்லை ….காத்திருங்கள்” என்று கனி  (படம்) தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில், ம.சீ.ச வேட்பாளர் டான் ஆ எங் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் ஜலிகா முஸ்தபாவை விட 8,851 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

எனவே கடந்த இரு பொதுத் தேர்தல்களில் கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிட்டு தேசிய முன்னணியிடம் தோல்வி கண்ட பிகேஆர் தற்போது லிம் கிட் சியாங் ஜோகூர் மாநிலத்தில் நுழைவதற்கு ஏதுவாக இந்த தொகுதியை ஜ.செ.கவிற்கு விட்டுக் கொடுத்தது.Chua Soi Lek

சீன வாக்குகள் அதிகம் நிறைந்த கேலாங் பாத்தா தொகுதியில் லிம் கிட் சியாங் இம்முறை போட்டியிடுவதால், அவருக்கு எதிராக ஒரு சரியான வேட்பாளரைக் களமிறக்க, தேசிய முன்னணி திட்டமிட்டுவருகிறது.

இது தொடர்பாக ஜோகூர் பாரு, ம.சீ.ச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் (படம்) கூறுகையில்,

“கேலாங் பாத்தா தொகுதியில் கனி போட்டியிடுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. அவை வெறும் வதந்திகள் தான்” என்று தெரிவித்துள்ளார்.

எனவே கேலாங் பாத்தா தொகுதியில் லிம் கிட் சியாங்கிற்கு எதிராக போட்டியிடப் போகும் வேட்பாளர் பற்றிய தகவலை தேசிய முன்னணி விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.