Home 13வது பொதுத் தேர்தல் புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி?

புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி?

620
0
SHARE
Ad

Kasturi-Pattoo-Sliderபெட்டாலிங் ஜெயா, ஏப்.6-  30 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதியில் வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக சீமோன் லீ சோங் போட்டியிடவுள்ள வேளையில், ஜ.செ.க.சார்பில் பட்டுவின் மகள் கஸ்தூரி ராணியும், கெராக்கான் சார்பில் ஹோன் செய் செங் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இத்தொகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு எட்வர்ட் லீ போ லின் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி எந்த வேட்பாளரும் இல்லாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத்தேர்தலில் எட்வர்ட்டை எதிர்த்து போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ லிம் சோங்க் சிங் 8,812 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சீமோன் அடுத்த வாரம் வியாழக்கிழமை வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.