Home One Line P1 பேராக் மாநிலத்தில் தேர்தலா?

பேராக் மாநிலத்தில் தேர்தலா?

777
0
SHARE
Ad

ஈப்போ: பேராக் மாநிலத்தில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மலேசிய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

நேற்று புதன்கிழமை இணையம் மற்றும் சமூக ஊடக அறிக்கைகளைப் பற்றி குறிப்பிடுகையில், தவறாகப் புரிந்து கொள்வதை தவிர்ப்பதற்கு, எந்தவொரு ஊடகமும் அல்லது பொதுமக்களும் ஆணையத்துடன் கலந்தாலோசித்து தகவல்களை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அசார் அசிசான் ஹாருன் தெரிவிதார்.

பொதுமக்கள் தவறாகப் புரிந்து கொள்வதைத் தவிர்ப்பதற்காக, தேர்தல் விவகாரங்களில் எந்தவொரு செய்தியையும் வெளியிடுவதற்கு முன்னர் எந்தவொரு ஊடகமும் அல்லது பொதுமக்களும் முதலில் தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறதுஎன்று அசார் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று, வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்தப்படும் பள்ளிகளுக்கு வருகை தருவது தொடர்பாக பேராக் மாநில கல்வித் துறையிலிருந்து பேராக் மாநிலத் தேர்தல் அலுவலகத்திற்கு ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்ததாகவும், பேராக் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் ஊக அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

பள்ளிகளுக்கு வருகை தருவது என்பது அவ்வப்போது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் மறுஆய்வு விஷயமாகும் என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த விரும்புகிறது. தற்போதுள்ள வாக்குச் சாவடிகளின் பொருத்தத்தைக் காணும் நோக்கில் இந்த ஒப்பந்தம் 2018 டிசம்பர் முதல் மலேசியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடந்து வருகிறது. இது வாக்குச் சாவடியில் வாக்காளர்களின் பற்றாக்குறை இல்லை என்பதை உறுதி செய்வதற்காகவே.”என்று அசார் கூறினார்.

இதற்கிடையில், எந்நேரத்திலும் மாநிலத் தேர்தல்கள் நடத்தப்பட்டால் பேராக் காவல் துறை எந்தவொரு சாத்தியத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் என்று பெர்னாமா நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.