2018-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸூக்கிற்கு வழங்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கேவுக்கு வழங்கப்பட்டது.
இதனிடையே, நேற்று புதன்கிழமை, வேதியியலில் நோபல் பரிசு வென்றவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு ஜான் பி. குடெனோஃப், எம். ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் அகிரா யோஷினோ ஆகியோருக்கு, லித்தியம் அயன் மின்கலன்களின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டது.
இதனிடையே, அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரை நாளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) நோர்வே நோபல் குழு அறிவிக்கும். அக்டோபர் 14-ஆம் தேதி ஆல்பிரட் நோபலின் பொருளாதார அறிவியல் பிரிவு வெற்றியாளரின் அறிவிப்புடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.
ஒவ்வொரு வெற்றியாளருக்கும் வழங்கப்படும் மொத்த பரிசுத் தொகை ஒன்பது மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா(தோராயமாக 940,000 அமெரிக்க டாலர்) ஆகும்.