Home One Line P0 வெள்ளை வேட்டி, சட்டை, தோளில் துண்டு – தமிழர் பாரம்பரியப்படி ஜின்பிங்கை வரவேற்றார் மோடி

வெள்ளை வேட்டி, சட்டை, தோளில் துண்டு – தமிழர் பாரம்பரியப்படி ஜின்பிங்கை வரவேற்றார் மோடி

2268
0
SHARE
Ad

மகாபலிபுரம் – (மலேசிய நேரம் இரவு 7.30 மணி) பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் பல்லவ நாட்டு மக்களாக சீனர்களோடு கலாச்சார, வணிக உறவுகளைக் கொண்டிருந்த வரலாற்றுபூர்வ நகரான மகாபலிபுரத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வந்தடைந்தார்.

வழக்கமாக தனக்கே உரிய உடையில் வலம் வரும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று வழக்கத்திற்கு மாறாக, வெள்ளை வேட்டி, வெள்ளி சட்டை, தோளில் துண்டு என தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து ஜின் பிங்கை வரவேற்றார்.

சென்னை வந்தடைந்த சீன அதிபரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரவேற்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் உடனிருந்து சீன அதிபரை வரவேற்றனர்.

#TamilSchoolmychoice

சென்னை விமான நிலையத்திலிருந்து கிண்டி, ஐடிசி சோழா தங்கும் விடுதியை வந்தடைந்த சீன அதிபர் அங்கு ஓய்வெடுத்த பின்னர் காரில் புறப்பட்டு மகாபலிபுரம் சென்றடைந்தார்.

ஏராளமான கார்கள் புடைசூழ, பலத்த பாதுகாவலுடன், காலியாகக் கிடந்த சாலையில் மகாபலிபுரம் நோக்கிச் சென்ற ஜின்பிங்கை சில இடங்களில் பொதுமக்கள் வரவேற்பு நல்கினர். இருப்பினும் அவரது வாகன அணிவகுப்பு எங்கேயும் நிற்காமல் நேராமல் மகாபலிபுர பழங்காலச் சிலைகள் அமைந்துள்ள பகுதியைச் சென்றடைந்தது.

அங்கு வேட்டி சட்டையுடன் தயாராகக் காத்திருந்த மோடி ஜின்பிங்கை வரவேற்று, பழங்கால மாமல்லபுரச் சிற்பங்களைக் காட்டி விளக்கினார்.