Home One Line P1 வாக்களிக்கும் வயது 18: தேர்தல் ஆணையம், தேசிய பதிவு இலாகா சிறப்பு பணிக்குழு அமைத்தன!

வாக்களிக்கும் வயது 18: தேர்தல் ஆணையம், தேசிய பதிவு இலாகா சிறப்பு பணிக்குழு அமைத்தன!

800
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேர்தல் ஆணையம் மற்றும் தேசிய பதிவு இலாகா ஆகியவை வாக்களிக்கும் வயது 18 மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவை அமல்படுத்துவது குறித்து சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளன.

இந்த பணிக்குழு மலேசிய குடிமக்களின் தகவல்கள் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களை ஒருங்கிணைக்கும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அசார் அசிசான் ஹாருன் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, இரு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்புத் திட்டங்களில் ஒன்றாக, குடிமக்கள் தங்களின் சமீபத்திய குடியிருப்பு முகவரியை தேசிய பதிவி இலாகாவில் புதுப்பிக்க ஊக்குவிப்பதற்காக ஒரு பெரிய பிரச்சாரத்தை ஏற்பாடு செய்வதும் அடங்கும்என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

வாக்களிக்கும் வயது 18 மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவை அமல்படுத்துவது 2021-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றாலும், இவற்றை விரைவில் செயல்படுத்த தேர்தல் ஆணையம் முயற்சிக்கும் என்று அசார் கூறினார்.

இம்மாற்றக் காலத்தில், அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல் உதவி பதிவாளரை (பிபிபி) நியமிக்க தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளதாக அசார் நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

18 வயதான வேட்பாளர் மாநில சட்டசபையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நவம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அமர்வதற்கு மாநில அரசியலமைப்பில் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக அசார் கூறினார்.

மக்களவையில் பிரதிநிதிகளாக 18 வயது வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது இந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.