Home One Line P2 தாக்குப் பிடிப்பாரா டொனால்ட் டிரம்ப்?

தாக்குப் பிடிப்பாரா டொனால்ட் டிரம்ப்?

666
0
SHARE
Ad

வாஷிங்டன் – 2016-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உலக மக்களை அதிசயத்தில் ஆழ்த்திய டொனால்ட் டிரம்பின் 4 ஆண்டுகால பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைகிறது.

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வந்தாலும், அவர் பதவிக்கு வந்தது முதல் அவரைச் சுற்றி எழுப்பப்பட்டு வரும் சர்ச்சைகள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன.

தேர்தலில் வெற்றி பெற ரஷியாவின் உதவியை இரகசியமாக நாடினார் என்பது முதற்கொண்டு பல பெண்கள் முன்வந்து அவர்மீது பாலியல் தொல்லைகள் புகார்களைத் தெரிவித்தாலும் இதுவரையில் அவர் அதிபராகத் தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் இருக்கிறார். காரணம், அமெரிக்க அதிபர் என்ற பதவிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர் எல்லாப் புகார்களையும் இதுவரையில் தற்காத்து வருகிறார்.

#TamilSchoolmychoice

அமெரிக்க நாடாளுமன்றம் டிரம்புக்கு எதிராக ‘இம்பீச்மெண்ட்’ (impeachment inquiry) எனப்படும் அவரது நம்பகத் தன்மைக்கு எதிரான விசாரணைகளைத் தொடக்கியிருக்கும் வேளையில் அமெரிக்க நீதிமன்றங்களும் அவருக்கு எதிரான போராட்டங்களைத் தொடக்கியிருக்கின்றன.

கடந்த எட்டு ஆண்டுகளாகத் தனது வருமான வரி விவரங்களைச் சமர்ப்பிக்காமல் தவிர்த்து வரும் டிரம்ப் அந்த விவரங்களை அடுத்த ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைத் தடுத்து நிறுத்த டிரம்ப் இனி உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும். அல்லது இந்த வழக்கின் முடிவை மறு ஆய்வு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக அவருக்கு மேலும் ஒரு வாரகால அவகாசம் இருக்கிறது.

நாடாளுமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டேன் என டிரம்பும் அறிவித்து விட்டார்.

இதற்கிடையில் டிரம்ப் கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியடைய உக்ரேன் நாட்டுடன் இரகசிய பரிமாற்றங்களைக் கொண்டிருந்தார் என்ற புகார் மீதும் நீதிமன்ற விசாரணைகள் இன்னொரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவையெல்லாம் அடுத்தடுத்த வாரங்களில் ஒரு முடிவுக்கு வரும்போது டிரம்ப் பதவி விலக வேண்டி வரலாம், அல்லது குறைந்த பட்சம் அடுத்த தவணைக்கான அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது