Home One Line P1 கிளந்தானுக்கான எண்ணெய் உரிமத்தொகை கொடுக்கப்பட்டுவிட்டது!- குவான் எங்

கிளந்தானுக்கான எண்ணெய் உரிமத்தொகை கொடுக்கப்பட்டுவிட்டது!- குவான் எங்

681
0
SHARE
Ad

கோத்தா பாரு: கிளந்தானுக்கு எண்ணெய் உரிமத்தொகை கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை என்று கூறும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அரசிடம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

கடந்த மாதம் பணம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பிரதமரின் உத்தரவின் பேரில் நான் பணம் செலுத்தியுள்ளேன். நான் எனது அலுவலகத்தில் விசாரித்ததில், பணம் செலுத்தப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். கட்டணம் உண்மையில் ஜனவரி மாதம் திட்டமிடப்பட்டிருந்தது, ஆயினும், கடந்த மாதம் அதனை நாங்கள் செலுத்திவிட்டோம்”

#TamilSchoolmychoice

எனவே அவர்கள் தவறான அறிக்கைகளை வெளியிட தேவையில்லை. உண்மைகளைப் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். கிளந்தான் அரசாங்கத்துடன் அவர்கள் சரிபார்க்கலாம்என்று அவர் இன்று செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

2020 வரவு செலவு திட்ட விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இஸ்மாயில் சாப்ரி ஆற்றிய உரையை லிம் குறிப்பிட்டுக் கூறினார்.

இதற்கிடையில், அகமட் மர்சுக் ஷாரி தலையிட்டு கிளந்தானுக்கு எண்ணெய் உரிமத்தொகையான ஐந்து விழுக்காடு இன்னும் கொடுக்கப்படவில்லை என்று கூறினார்.