Home One Line P2 துருக்கி: பொருளாதாரத் தடைகளைக் கடந்து ஆயுத விற்பனைகள் தொடரும்! -அமெரிக்கா

துருக்கி: பொருளாதாரத் தடைகளைக் கடந்து ஆயுத விற்பனைகள் தொடரும்! -அமெரிக்கா

719
0
SHARE
Ad

துருக்கி: வடகிழக்கு சிரியாவில் இராணுவ நடவடிக்கை தொடர்பாக துருக்கி நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் துருக்கி இடையே ஆயுத விற்பனையைத் தொடர நிதித் துறை முடிவு எடுத்துள்ளது என்று நேற்று செவ்வாயன்று அதிகாரி ஒருவரின் கூற்றினை மேற்கோள் காட்டி அனோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

புரிந்துணர்வு என்னவென்றால், ஒரு பொது தள்ளுபடியை நிதித் துறை வெளியிடும். இது தொடர்ந்து உத்தியோகபூர்வ நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கும். இராணுவ விற்பனை மற்றும் பிற பொருட்களையும் உள்ளடக்குவதே இதன் நோக்கம்என்று பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

வடகிழக்கு சிரியாவில் துருக்கியின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இரண்டு துருக்கிய அமைச்சுகள் மற்றும் மூன்று மூத்த அரசாங்க அதிகாரிகள் மீது அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.

துருக்கியின் தேசிய பாதுகாப்பு அமைச்சு, எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகார், எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் பாதே டோன்மேஸ் மற்றும் உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு ஆகியோருக்கு வாஷிங்டன் பொருளாதாரத் தடைகளை விதித்தது.

எந்தவொரு சாத்தியமான தாக்கத்தையும் உறுதியாக அறிந்து கொள்வதற்காக தள்ளுபடிகள் உண்மையில் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்பதை நாங்கள் பார்க்க வேண்டும்.” என்று அந்த அதிகாரி கூறினார் .

துருக்கியுடன் இந்த நடவடிக்கையை நிறுத்த அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முயல்கிறது என்றும் அந்த அதிகாரி கூறினார்.