Home One Line P1 பிபிசி 100: “என்னை விமர்சிக்கும் கூட்டத்தினை புறக்கணிக்க வேண்டியுள்ளது!”- நிஷா அயோப்

பிபிசி 100: “என்னை விமர்சிக்கும் கூட்டத்தினை புறக்கணிக்க வேண்டியுள்ளது!”- நிஷா அயோப்

775
0
SHARE
Ad

கோலாலம்பூர்: திருநங்கைகளின் ஆர்வலர் நிஷா அயோப் பிபிசியின் வருடாந்திர ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறித்து, அவரை விமர்சிக்கும் கூட்டத்தினைப புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை தமது முகநூல் பதிவில் இதனை வெளியிட்ட நிஷா, பிபிசியின் அங்கீகாரத்திற்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்தார். இது திருநங்கைகளுக்கு முக்கியமான ஓர் அங்கீகாரம் என்று அவர் கூறினார்.

இது மலேசியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள திருநங்கைகளின் இருப்பை அங்கீகரிப்பதற்கு சமம் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

தேர்ந்தெடுக்கப்பட்ட தைரியமான பெண்களில் ஒருவராக இருப்பதற்கு நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். மேலும், உத்வேகம் தரும் மற்றும் ஆச்சரியமான பெண்கள் அனைவரின் வரிசையில் என் பெயரும் இடம்பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன்.”

என்னைப் பொறுத்தவரை, திருநங்கைகளுக்கு இந்த அங்கீகாரம் முக்கியமானது. ஏனென்றால் இது மலேசியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள திருநங்கைகளின் இருப்பைக் காண்பது மற்றும் அங்கீகரிப்பது பற்றியது. இது எங்களைப் போன்றோரின் தேவைகள் மற்றும் பல பிரச்சனைகள் குறித்து மேலும் நிறைய விழிப்புணர்வை உருவாக்கும்.என்று அவர் கூறினார்.

அவர் மீது வீசுப்படும் விமர்சனங்களால் அதிகம் கவலைப்பட முடியாது என்று நிஷா கூறினார். ஒரு சிலர் அவர் ஓர் உண்மையான பெண் அல்ல என்பதால் பட்டியலில் அவர் தேர்வு செய்யப்பட்டதை கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை பிபிசி வெளியிட்ட 2019-ஆம் ஆண்டுக்கான பதிப்பில், மலேசியாவில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக நிஷா போராடி வந்த காரணத்திற்காக அவர் தேர்வு செய்யப்படதாக குறிப்பிட்டிருந்தது.