Home One Line P2 பிபிசி: இளம் பத்திரிக்கையாளர் ஹான்னா யூசோப் திடீர் மரணம்!

பிபிசி: இளம் பத்திரிக்கையாளர் ஹான்னா யூசோப் திடீர் மரணம்!

872
0
SHARE
Ad

பிரிட்டன்: பிபிசி செய்தியின் திறமைமிக்க நிருபராக கருதப்படும் ஹான்னா யூசோப் தனது 27-வது வயதில் திடீரென இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை கடந்த திங்களன்று ஓர் அறிக்கையில் அவரது குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டது.  இருப்பினும் ஹான்னாவின் மரணத்திற்கான காரணம் எதுவும் தெரியவிக்கப்படவில்லை.

ஹான்னா பத்திரிகையாளர்கள் உலகிற்கு அளித்த அசாதாரண பங்களிப்புகளுக்காகவும் பிபிசியில் அவர் செய்த பணிக்காகவும் பலர் அங்கீகரிப்பார்கள். அவரது இழப்பால் நாங்கள் வருத்தப்படுகிறோம் என்றாலும், ஹான்னாவின் மரபு அவரது சகாக்களுக்கும் சமூகத்திற்கும் உத்வேகம் மற்றும் ஊக்கத்தை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் அவரது அழகான நினைவுகள் தொடர்ந்து நினைவில் இருக்கும்என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் பிபிசி செய்தி இயக்குனர் பிரான் அன்ஸ்வொர்த் கூறுகையில், ஹான்னா காலமானதை பத்திரிகையாளர் உலகில் பெரும் இழப்பு என்று விவரித்தார்.

ஹான்னா யூசோப் ஒரு திறமையான இளம் பத்திரிகையாளர். அவர் பிபிசி முழுவதும் போற்றப்படுகிறார். மேலும் அனைத்து குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கல்என்று அவர் டெலிகிராப் செய்தித் தளத்திற்கு கூறியுள்ளார்.

நோய்வாய்ப்பட்ட மற்றும் வருடாந்திர விடுப்பு வழங்கப்படவில்லை, மற்றும் ஒப்பந்தத்திற்கு வெளியே பணிபுரிந்ததாகக் கூறப்படும் கோஸ்டா காபி தொழிலாளர்களின் தலைவிதி பற்றிய வெளிப்பாடுகள் உள்ளிட்ட தனது விசாரணைக் கட்டுரைகளின் மூலம் ஹான்னா பத்திரிகை உலகில் நற்பெயரை உருவாக்கியுள்ளார்.

1992-இல் சோமாலியாவில் பிறந்த ஹான்னா, நெதர்லாந்தில் வளர்ந்து, 2017-இல் ஸ்காட் டிரஸ்ட் உதவித்தொகையைப் பெற்று, இலண்டன் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறையில் முதுகலைப் பட்டத்தைத் தொடர்ந்தார்.