கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட நான்கு நபர்களையும் இவ்வழக்கில் தொடர்புப்படுத்த இதுவரை தெளிவான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை துணை இயக்குனர் மியோர் பாரிடாலத்ராஷ் வாஹிட் கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக சில தரப்பினரால் எழுப்பப்பட்ட சந்தேக நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.
“இந்த நான்கு பேரைப் பற்றி பலர் கேட்டார்கள். உண்மையில், நாங்கள் இந்த நான்கு நபர்களை மட்டும் கைது செய்யவில்லை. சரியாகச் சொல்வதானால், விசாரணைகளை எளிதாக்க 12 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் காவல் துறையின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.”
“நாங்கள் எங்கள் விசாரணையை நடத்துவதால் அவர்கள் ஓடிப்போவது ஒரு பிரச்சனையாக இருக்காது என்று நான் கருதுகிறேன். இந்த 12 நபர்களை இச்சம்பவத்துடன் இணைப்பதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது” என்று புக்கிட் அமானில் செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்ட நான்கு பேர் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை அம்னோ சட்டமன்ற உறுப்பினர் நோ ஒமார் கேள்வி எழுப்பினார்.