Home One Line P1 100-க்கும் மேற்பட்ட புட்பாண்டா பணியாளர்கள் சைட் சாதிக் வீட்டு முன் வேலைநிறுத்தப் போராட்டம்!

100-க்கும் மேற்பட்ட புட்பாண்டா பணியாளர்கள் சைட் சாதிக் வீட்டு முன் வேலைநிறுத்தப் போராட்டம்!

712
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 100-க்கும் மேற்பட்ட புட்பாண்டா பணியாளர்கள் நேற்றிரவு இளைஞர் மற்றும் விளையாட்டுத் தூறை அமைச்சர் சைட் சாதிக்கின் வீட்டில் கூடி, அந்நிறுவனத்தின் புதிய கட்டணத் திட்டத்தில் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ஜோகூர், பினாங்கு, மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் கோலாலம்பூரில் பணிபுரிபவர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டணர்.

ஷாம் என்று அறியப்பட விரும்பிய பினாங்கைச் சேர்ந்த பணியாளர், நிறுவனம் பணம் செலுத்தும் திட்டம் தொடர்பான வேலைநிறுத்தப் போராட்டத்தில் இணைந்தால் அவர்களை நீக்குவதாக நிருவாகம் அச்சுறுத்தியதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

பினாங்கில் குறைந்தது 500 பணியாளர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் முழுநேரமாக வேலை செய்கிறார்கள். புதிய திட்டத்தின்படி சம்பளம் கிட்டத்தட்ட பாதியாகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று, புதிய கட்டணத் திட்டம் நடைமுறைக்கு வந்த அதே நாளில், பல மாநிலங்களில் ஏராளமான புட்பாண்டா பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.

நேர்று, இரண்டு மணி நேர உரையாடலின், ​​கலந்து கொண்டவர்கள் தங்கள் கவலைகளை அமைச்சரிடம் தெரிவித்தனர். அமைச்சர் அவர்களது பிரச்சனையை மக்களவையில் பேசுவார் என்று எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறினார். மேலும், சைட் சாதிக் இந்த பிரச்சனையை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டிடம் கொண்டு செல்ல உள்ளதாகக் கூறினார்.

நிறுவனம் மில்லியன் கணக்கானக்காக ஈட்டுகிறது. ஆனால், தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். பெரிய நிறுவனங்கள் முன்னேறும் அதே நேரத்தில், அவர்களது தொழிலாளர்கள் நலன் கருதி அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.”

அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்கள் (வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால்) கூட இருக்கிறார்கள். இது சட்டத்திற்கு எதிரானது. நாங்கள் பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்க முடியாது, ஆனால் அதே நேரத்தில் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அது தெளிவான தவறு. புட்பாண்டா அதன் முந்தைய கட்டணத் திட்டத்திற்குத் திரும்ப வேண்டும்.” என்று அமைச்சர் பேசினார்.