Home One Line P2 பாரிசில் 720 பாலினங்களைக் கொண்ட உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

பாரிசில் 720 பாலினங்களைக் கொண்ட உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

882
0
SHARE
Ad

பாரிஸ்: பாரிசில் உள்ள விலங்கியல் பூங்காவில் நேற்று வியாழக்கிழமை ஒரு புதிய மர்ம உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்குப்ளோப்என்று பெயரிடப்பட்டுள்ளது.

அது ஒரு பூஞ்சை போல தோற்றமளிக்கக் கூடியது என்றும், ஆனால் விலங்குகள் போன்ற பண்புகளை அது கொண்டிருக்கிறது என்றும் அது தெரிவித்தது.

மஞ்சள் நிற உயிரணுவான இதற்கு வாய், வயிறு அல்லது கண்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இருப்பினும், அதனால் உணவைக் கண்டுபிடித்து ஜீரணிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ப்ளோப் கிட்டத்தட்ட 720 பாலினங்களைக் கொண்டுள்ளது.  கால்கள் அல்லது இறக்கைகள் இல்லாமல் அதனால் நகர முடியும். கூடுதலாக, இது இரண்டு நிமிடங்களில் தன்னை குணமாக்கும். மிகவும் ஆச்சரியப்படும் விதமாக, அதற்கு மூளை இல்லை, ஆனால் கற்றல் திறன் கொண்டுள்ளது.”

நீங்கள் இரண்டு ப்ளோக்களை ஒன்றாக இணைத்தால், ஏதாவது கற்றுக் கொண்ட ஒரு தகவல் அல்லது அறிவை தனது கூட்டாளருக்கு அது மாற்றும் திறன் உள்ளதுஎன்று இயற்கை வரலாற்று அருங்காட்சியக இயக்குனர் புருனோ டேவிட் கூறினார்.

1958-ஆம் ஆண்டில் வெளியான ஸ்டீவ் மெக்வீன் நடித்த ஒரு திகில் அறிவியல் புனைகதை படமானப்ளோப்’ என்ற படத்தின் பெயரை இதற்கு வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது ஒரு தாவரம் அல்ல என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், இது ஒரு விலங்கு அல்லது பூஞ்சையா என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் இது காளான்கள் போல தோற்றமளித்தாலும், அது ஒரு விலங்கின் குணாதிசயங்களைக் கொண்டுள்ளது மற்றும் கற்றுக்கொள்ள முடிகிறதுஎன்று டேவிட் தெரிவித்தார்.