Home One Line P1 மலேசியப் பொருட்கள் தரமற்றவை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும்!

மலேசியப் பொருட்கள் தரமற்றவை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும்!

816
0
SHARE
Ad

கூச்சிங்: மலேசியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் தரமற்றவை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும் என்று உள்நாட்டு வணிக மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சோங் சியேங் ஜென் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் அனைத்துலக சந்தையை கடக்கக்கூடிய பல உள்ளூர் தயாரிப்புகள் பல உள்ளன. உண்மையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு,  உற்பத்தித் தொழில் சுமார் 28 விடுக்காடு பங்களிக்கிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எண்ணெய் மற்றும் எரிவாயு முக்கிய பங்களிப்பு என்ற கருத்துக்கு இது முரணானதுஎன்று அவர் மேலும் கூறினார், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தத் தொழில் எட்டு விழுக்காடு மட்டுமே பங்களிக்கிறது.

#TamilSchoolmychoice

கணக்கெடுப்பின் அடிப்படையில், மலேசியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம் என்ற பிரச்சாரத்தைப் பற்றி 70 விழுக்காட்டு பேர் அறிந்திருந்தாலும், உள்ளூர் மக்களில் 40 விழுக்காடு பேர் மட்டுமே உள்நாட்டு உற்பத்தியை தரமானதாகக் கருதுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் ஒப்பிடும்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் தரம் குறைவானது என்று இன்னும் 60 விழுக்காடு பேர் நம்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறதுஎன்று அவர் கூறினார்.