Home One Line P1 முகக்கவச விலையை 1 ரிங்கிட் 20 காசுக்கும் கீழ் அரசு குறைக்கும்

முகக்கவச விலையை 1 ரிங்கிட் 20 காசுக்கும் கீழ் அரசு குறைக்கும்

554
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சகம், முகக்கவசத்தின் 1 ரிங்கிட் 20 காசு விலையை மேலும் குறைக்கும் என்று இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

“நாங்கள் 1 ரிங்கிட் 20 காசுக்குக் கீழ் விற்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்” என்று அதன் அமைச்சர் அலெக்சாண்டர் நாந்தா லிங்கி தெரிவித்தார்.

ஆகஸ்டு 1 முதல், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்துகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து அதன் விலையை 1 ரிங்கிட் 50 காசிலிருந்து 1 ரிங்கிட் 20 காசாக அரசு குறைத்தது.

#TamilSchoolmychoice

இக்கட்டளைக்கு இணங்க மறுக்கும் நபர்களுக்கு எதிராக, சட்டம் 342 (தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988)- இன் கீழ் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு குறிப்பிட்டிருந்தது, அதன்படி அதன் அமலாக்கம் தற்போது செய்லபடுத்தப்பட்டு வருகிறது.