ஈப்போ: வணிக வளாகங்களில் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டிய பகுதிகளில் நுழைவோர், மைசெஜாதெரா குறுஞ்செயலியைப் பயன்படுத்தி அவ்வாறு செய்யலாம் அல்லது அவர்களின் விவரங்களை ஒரு பதிவு புத்தகத்தில் எழுதலாம்.
எந்தவொரு முறையும் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதால் இரண்டையும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று துணை பேராக் காவல் துறைத் தலைவர் துணை ஆணையர் டத்தோ கோ பூன் கெங் கூறினார்.
“முன்னுரிமை மைசெஜாதெரா குறுஞ்செயலியைப் பயன்படுத்தி பதிவு செய்வது” என்று அவர் கூறினார்.
இருப்பினும், தனிநபருக்கு திறன்பேசி இல்லையென்றால், அவர்கள் தங்கள் விவரங்களை பதிவு புத்தகத்தில் எழுத வேண்டும்.
“அவர்களுக்கு தேர்வுகள் உள்ளன, எனவே கடைகள் இன்னும் இரண்டையும் அமல்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
கியூஆர் குறியீட்டை பதிவு செய்தவர்களுக்கு அதனை படமாக எடுத்து வைத்திருக்கவும் அவர் அறிவுறுத்தினார்.
“எனவே காவல் துறையினர் சோதனைக்கு வரும்போது, அவர்கள் ஆதாரத்தை முன்வைக்க முடியும்.
“கடைக்காரர் வெப்பநிலையை சோதித்து, அது 37.5 பாகைக்கும் குறைவாக இருந்தால், வாடிக்கையாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.