Home One Line P2 அமிதாப் பச்சன் : 4 நாட்களுக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்

அமிதாப் பச்சன் : 4 நாட்களுக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்

903
0
SHARE
Ad

மும்பை – உடல்நலக் குறைவால் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தி நடிகர் அமிதாப் பச்சான் 4 நாட்களுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை இரவு இல்லம் திரும்பினார்.

அவருடன் அவரது மனைவி ஜெயா பாதுரியும், மகன் அபிஷேக் பச்சனும் மருத்துவமனையிலிருந்து வெளியேறி இல்லம் திரும்பியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர்15) நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார் என சில செய்தி ஊடகங்கள் தெரிவித்த வேளையில் அவருக்கு வழக்கான ஆண்டுதோறும் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்துவதற்குத்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் வேறு சில செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

“கோன் பனேகா குரோர்பதி” என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை இந்த ஆண்டும் நடத்துவதற்கு அமிதாப் பச்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான படப்பிடிப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

77 வயதான முதுமை நிலையிலும், அவரது உள்ளுறுப்புகள் சில குறைந்த அளவே செயல்பட்டு வரும் நிலையிலும் இடைவிடாது படங்களில் நடிப்பதையும், மக்களை மகிழ்விப்பதையும் தொடர்ந்து செய்து வருபவர் அமிதாப் பச்சன்.

அண்மையில்கூட, மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் படத்தில் அமிதாப் நடிக்கவிருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகியிருக்கின்றன.