Home One Line P2 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்

1392
0
SHARE
Ad

புதுடில்லி – பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள நீலம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள நான்கு பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய இராணுவம் தாக்கி அழித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த சண்டையில் இந்திய இராணுவத்தை எதிர்த்துத் தாக்கிய ஐந்து பாகிஸ்தானிய இராணுவத்தினரை இந்தியப் படைகள் கொன்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சக்திவாய்ந்த இராணுவ ஆயுதங்களைக் கொண்டு இந்திய இராணுவம் தாக்கியதில் பயங்கரவாத முகாம்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானிய இராணுவம் நடைமுறையில் இருந்த போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்கள் நடத்தியதில் இரண்டு இந்திய இராணுவ வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்திய இராணுவம் இந்த பதிலடித் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

எல்லை மீறி பயங்கரவாத முகாம்களின் மீது தாக்குதல்களை இந்தியா இராணுவம் தொடர்ந்து நடத்தும் என்றும் இந்திய இராணுவம் அறிவித்திருக்கிறது.