Home One Line P1 விடுதலைப் புலிகள் விவகாரம் : சொஸ்மாவை எதிர்த்து 5 பேர் வழக்கு

விடுதலைப் புலிகள் விவகாரம் : சொஸ்மாவை எதிர்த்து 5 பேர் வழக்கு

674
0
SHARE
Ad

கோலாலம்பூர் – விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் 12 பேர்களில் ஐவர் சொஸ்மா எனப்படும் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரவிருக்கின்றனர்.

ஹேபியஸ் கோர்ப்பஸ் எனப்படும் ஆட்கொணர்வு மனுவை  நாளை திங்கட்கிழமை அந்த ஐவரின் சார்பில் வழக்கறிஞர்கள் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வர் என வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் (படம்) தெரிவித்தார்.

அதே வேளையில் ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்திலும் இதே போன்ற ஆட்கொணர்வு மனு ஒன்று சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

#TamilSchoolmychoice

நீதிமன்றத்தில் மனுக்களைச் சமர்ப்பித்த பின்னர் நாளை திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளிக்கப் போவதாகவும் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்தார்.

ஆட்கொணர்வு மனு என்பது, ஒருவர் காணாமல் போயிருந்ததாகக் கருதப்பட்டாலோ, எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்றாலோ, அல்லது காவல் துறையின் கைப்பிடியில் இருக்கிறார் என்பது தெரிய வந்தாலோ, அவரை நீதிமன்றத்தில் நேரில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் – அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்பதை நிரூபிக்க வேண்டும் – என நீதிமன்றத்தை உத்தரவிடக் கோரும் விண்ணப்பம்தான் ஹேபியஸ் கோர்ப்பஸ் எனப்படும் ஆட்கோணர்வு மனுவாகும் (ஹேபியஸ் கோர்ப்பஸ் என்பது லத்தீன் சொற்றொடர்).

ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.சாமிநாதன், பி.குணசேகரன், மற்றும் எஸ்.சந்துரு, வி.சுரேஷ் குமார், எஸ்.அறிவானந்தன் ஆகியோர் சார்பில் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றன.

கடந்த அக்டோபர் 10 முதற்கொண்டு காவல் துறை நடத்திய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து நாடளாவிய நிலையில் இதுவரையில் 12 பேர் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.